Sunday, August 04, 2019

மனஅழுத்தம்

மனஅழுத்தம் பற்றி அனைவரும் அறிய வேண்டியது என்ன?
இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றான கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “எனது கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் எனது தொழிலை முதன்மையானதாக முன்னிறுத்த முடியவில்லை. என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நீண்ட காலம் கடுமையாகப் போராடினேன். ஆனால், இதற்கு மேலும் இந்த அழுத்தத்தை என்னால் தாங்கமுடியாயாது. தனியார் பங்குதாரர் ஒருவரிடமிருந்து வரும் அழுத்தத்தை என்னால் தாங்கமுடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் - 59 வயதான வி.ஜி. சித்தார்த்தா. கபே காபி டே அதிபர்.

அது கடந்த திங்கட்கிழமை... சூரியன் மறைந்து விட்ட மாலைப்பொழுது.. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சக்லேஷ்புராவுக்கு காரில் சென்றவர்தான் வழியில் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில்... ‘வாக்கிங்’ போவதாக சொல்லி காரை நிறுத்தச்சொல்லி இறங்கி இருக்கிறார்.

வாக்கிங் போனவர் போனவர்தான். திரும்பி வரவில்லை. அப்போது யாருக்கும் தெரியாது, அவர் திரும்பி வர முடியாத இடத்துக்கு ‘வாக்கிங்’ போகிறார் என்று.

போனவரைக் காணாமல் பதை பதைத்துப்போனார் டிரைவர் பசவராஜ் பட்டீல். சித்தார்த்தாவின் குடும்பத்துக்கு தகவல் சொன்னார். போலீசுக்கு தகவல் பறந்தது.

ஆற்றுப்பாலத்தில் நடைப்பயிற்சி போனவர் வரவில்லை... தனிமையில்தான் போனார்.. ஆற்றுப்பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததை பார்த்ததாக யாரோ ஒரு மீனவர் தகவல் சொன்னார் என தகவல்கள் வந்தன. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்தால், சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

ஆளைக் காணவில்லை என்றதுமே மாபெரும் தேடல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. பின்னே, அவர் என்ன சாமானியரா? நாட்டின் வெளியுறவு மந்திரி, கர்நாடக மாநில முதல்-மந்திரி, மராட்டிய மாநில கவர்னர் பதவி வகித்த பெரிய மனிதர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்.

தனிப்பட்ட முறையிலும் சித்தார்த்தா தகுதியில் ஒன்றும் குறைந்தவர் அல்ல. இவரது குடும்பமும் சளைத்தது அல்ல. காபி உற்பத்தியில் 140 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்டது.

இந்தியா... ஆஸ்திரியா, செக் குடியரசு, மலேசியா, எகிப்து, நேபாளம் என பல உலக நாடுகளிலும் கிளைகளை பரப்பிய காபி டேயின் அதிபர்!

மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவர்... போர்ப்ஸ் பத்திரிகையால் அடையாளம் காணப்பட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர்.

கேட்கவா வேண்டும்? தீயணைப்பு படை, கடலோரக்காவல் படை, தேசிய பேரழிவு மீட்பு படை என அத்தனை படைகளும் களம் இறக்கப்பட்டன. ஆற்றில் இறங்கி தேடினார்கள்.

36 மணி நேர தேடல் வேட்டைக்கு பின்னர் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு சித்தார்த்தாவின் உயிரற்ற உடல், நேத்ராவதி ஆற்றில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது. அவர் எங்கிருந்து குதித்து தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது சடலம் கிடைத்திருக்கிறது.

ஆக, காபி டே என்ற ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி கொடி கட்டிப்பறந்தவர், இல்லாமல் போய் விட்டார். எல்லோரையும் அவரது மரணம் உலுக்கி எடுத்திருக்கிறது என்பது என்னவோ உண்மைதான்.

காபி டேயின் அதிபரான அவர் தனது சொந்தக்கடையில் வரிசையில் நின்று காபி வாங்கி குடிப்பார் என்று உருகுகிறார்கள் அவரது நண்பர்கள்.

தீர்வு தான் என்ன இந்த மன அழுத்தத்திற்கு ?

ஒரு கண்ணாடி டம்ளரில் நீருடன் நுழைந்தார் அந்த ஆசிரியர். வகுப்பறையில் அணைத்து மாணவர்களின் கண்களும் அவரையே நோக்கிக்கொண்டிருக்க, ஒரு மாணவனை அழைத்தார்.

இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீர் கனமானதா?

உன்னால் இதை தூக்க முடியுமா?

என்று கேட்டார்.

தினம் 10 கிலோ பாட புத்தகங்களை தூக்கி வரும் எனக்கு, இது என்ன அதனை கடினமா? என்று மாணவனும் சவாலுக்கு தயாரானான்.

ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை ஆனால் நேரம் ஆகா ஆகா கை வலிப்பதை உணர்ந்தான்.

இன்னும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க வலியும் அதிகரித்தது அவனுக்கு.

ஐயா, என்னால் முடியவில்லை இந்த போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று கூறி விடைபெற்றான்.

ஒரு கை அளவு தண்ணீரை சுமப்பது ஒன்றும் அதனை பாரமானது அல்ல ஆனால் அதை சுமந்துகொண்டே இருக்கும் போது தான் பாரம் அதிகரிக்கிறது.

மனஅழுத்தமும் அப்படி தான் இடைவிடாமல் மனஅழுத்தம் தந்த அந்த ஒன்றையே சிந்தித்துகொண்டே இருப்பதனால் இன்னும் அதிகமாகிறது.

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றின் மீது கவனத்தை செலுத்துங்கள்.அது உங்கள் குடும்பமாக இருக்கலாம் நண்பர்களாக இருக்கலாம் இசையாக இருக்கலாம்

மன அழுத்தத்தில் இருக்கும் பொது சோசியல் மீடியாக்களில் இருந்து வெளியேறி மீண்டும் உங்களை தனிமைப்படுத்தாதீர் நண்பர்களின் நட்பை துண்டித்துவிடாதீர் யேதேனும் ஒன்றை செய்துகொண்டே இருக்கும் போது உங்கள் மூளையை ஏமாற்றிவிடலாம் அதாவது உங்கள் சிந்தனையை வேறு ஒரு திசைக்கு எடுத்து செல்வதன் மூலம்.

நீங்கள் மிகவும் நம்பும் ஒருவரிடம் மனசு விட்டு பேசுங்க அவரை ஒரு 5 நிமிடமாவது கட்டி தழுவுங்கள்.

வாய் விட்டு சிரிங்க

100 வது முறையும்விழுந்து விட்டேனே என்று எண்ணாதீர்

இது என்ன?நான் 99 முறையும் எழுந்தவன் தானே என்று எண்ணுங்கள்.

உங்களுக்கான உலகம் அழகானது அதை முழு நிச்சயமாக நம்புங்கள். நீங்கள் ஓடும் பாதையில் ஏற்கனவே ஆயிரமாயிரம் பேர் சென்றுள்ளனர்.

இந்த பாதையிலும் சென்றுவிடலாம்

பணத்தை துரத்தாதீர்.

பணம் உங்களை துரத்தட்டும்.

மகிழ்ச்சியின் பின்னால் ஓடுங்கள், குடும்பத்தின் பின்னால் நில்லுங்கள்.

அரவிந்த் த.

No comments:

Post a Comment