Wednesday, December 15, 2021

Thank You Allianz


Thank You Allianz for this wonderful gift. I got this for participating in Allianz World Run 2021 and ranked 3rd worldwide.  

Aravind T.


Sunday, October 24, 2021

இரயில் ஓட்டுநர்கள்

இரயில் ஓட்டுநர்கள் பற்றி, கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இரயில் ஓட்டுநரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்றும் கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம்வரை வேலை செய்கிறார்கள்.

சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை... அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.

ஒரு இரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

ஒரு இரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தைவிட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி... இந்த இரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா..? அப்படித் தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது..?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது, யாராவது ஒருத்தர் விழித்திருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களைத் தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்குப் பிறகு விளக்கெரியும், அதையும் அவர்கள் உதாசீனப் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கெரியும், அதையும் உதாசீனப் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், Automatic Braking System மூலம்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தைக் கூட்டுவது, குறைப்பது, ஹரன் அடிப்பது போன்ற வேலைகளில் இருந்தால், அந்தப் பொத்தானை அமுக்க வேண்டியதில்லை.

இந்தக் காலத்தில்தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன் நாளிலெல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் இரயில்வே ஓட்டுநர்களுக்குத் தனியாகக் கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும். வயதான ஓட்டுநர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உச்சாவைப் பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.

ராத்திரி பத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 08.00 மணி ஆகும், அடக்கிக் கொண்டுதான் போக வேண்டும்.

ஆனால் மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம். ஒரு நிமிடம்தான் ஸ்டேஷனில் நிக்கும், அடுத்து சிக்னல் விழுந்தவுடன் வண்டி எடுக்கனும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம், டிராக்கில் ஏதேனும் பிராப்ளம், சிக்னல், மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்.!

கேட் horn அடிக்கனும்! 60 செகண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டா அவரை எழுப்பனும்! 19 kwh கரண்ட்டின் கீழ் வேலை! இன்ஜீன் சூடு!

ராத்திரியில் வண்டியின் வேகத்தைப் பொருத்து குளிரின் கொடுமை! எக்ஸஸ் ஸ்பீடு போகக் கூடாது! டிரையின் டைமிங் மெயிண்டன் பன்னனும்! சிவப்பு சிக்னலைத் தாண்டினால் ரிமூவ்டு ப்ரம் சர்வீஸ் எனப் பல அழுத்தங்கள் இருக்கு!

இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கனும்! காடுகளில் போகும்போது செயின் இழுத்து வண்டி நிக்கும்போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது. சிங்கம், புலி, யானை என இருக்கும்.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதிக் கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரசுக்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்... அப்போ ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும், அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால், பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்!

சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும்மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளைத் தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ "எல்லாரும்  சாப்பிட்டீர்களா, சாப்பாடு வாங்கி விட்டீர்களா?" எனக் கேட்பதும் இல்லை, அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!

நம்மைக் காட்டிலும் எல்லோரும் நன்றாக வாழ்கிறார்கள் என்று நினைப்பதும் நமக்குத் தான் சோதனையும் வேதனையும் அதிகம் என்று கலங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம் ! 

படித்ததில் பிடித்தது .....!

Ref : Facebook 

அரவிந்த் த. 

Thursday, September 30, 2021

SOME SOCIAL RULES THAT MAY HELP YOU


1. Don’t call someone more than twice continuously. If they don’t pick up your call, presume they have something important to attend to;

2. Return money that you have borrowed even before the person that borrowed you remember or ask for it. It shows your integrity and character. Same goes with umbrellas, pens and lunch boxes.

3. Never order the expensive dish on the menu when someone is giving you a lunch/dinner.

4. Don’t ask awkward questions like ‘Oh so you aren’t married yet?’ Or ‘Don’t you have kids’ or ‘Why didn’t you buy a house?’ Or why don't you buy a car? For God’s sake it isn’t your problem;

5. Always open the door for the person coming behind you. It doesn’t matter if it is a guy or a girl, senior or junior. You don’t grow small by treating someone well in public;

6. If you take a taxi with a friend and he/she pays now, try paying next time;

7. Respect different shades of opinions. Remember what's 6 to you will appear 9 to someone facing you. Besides, second opinion is good for an alternative;

8. Never interrupt people talking. Allow them to pour it out. As they say, hear them all and filter them all;

9. If you tease someone, and they don’t seem to enjoy it, stop it and never do it again. It encourages one to do more and it shows how appreciative you're;

10. Say “thank you” when someone is helping you.

11. Praise publicly. Criticize privately;

12. There’s almost never a reason to comment on someone’s weight. Just say, “You look fantastic.” If they want to talk about losing weight, they will;

13. When someone shows you a photo on their phone, don’t swipe left or right. You never know what’s next;

14. If a colleague tells you they have a doctors' appointment, don’t ask what it’s for, just say "I hope you’re okay". Don’t put them in the uncomfortable position of having to tell you their personal illness. If they want you to know, they'll do so without your inquisitiveness;

15. Treat the cleaner with the same respect as the CEO. Nobody is impressed at how rude you can treat someone below you but people will notice if you treat them with respect;

16. If a person is speaking directly to you, staring at your phone is rude;

17. Never give advice until you’re asked;

18. When meeting someone after a long time, unless they want to talk about it, don’t ask them their age and salary;

19. Mind your business unless anything involves you directly - just stay out of it;

20. Remove your sunglasses if you are talking to anyone in the street. It is a sign of respect. Moreso, eye contact is as important as your speech; and

21. Never talk about your riches in the midst of the poor. Similarly, don't talk about your children in the midst of the barren.

22.After reading a good message try to say "Thanks for the message".

APPRECIATION remains the easiest way of getting what you don't have...

Ref : Facebook 

Aravind T.. 

Friday, August 27, 2021

CAPITONYM

Is there a difference between  August and august? One of my friends asked.
 
I did not understand the difference between these two English words when first read.

Only later did it become clear that he was asking about Capitonym.

That is, one word he mentions (August) starts with a Capital Letter, and the other starts with august without a Capital Letter.

Such words are called Capitonym in English.

That is, if the first letter is changed to Capital, the meaning of the word changes.

Sometimes even the pronunciation changes.  Just take the words the friend pointed out.

August is the name of a month.  Derived from the name of the Roman emperor Augustus.

Rather, the word august means respectable and attractive. That is equivalent to words like Respected, distinguished, renowned, prestigious. I was in an august company or it was an august performance.
 
Another month also falls into this category.  You know that the word March refers to the third month of the year.

Rather the march is meant to take place at regular intervals as it does in the army.

What do you say if the second of the above words (august, march) occurs at the beginning of the sentence?  (The opening letter of the sentence must be written in capital letters only!)

It is important to take care not to get such a place.  That’s why I even included the word ‘rather’.

Capitonym is sometimes used to distinguish a particular object from other similar objects.

There are many suns in the universe.  One of them is called the Sun around which planets like the earth are orbiting.  

Church is a group of people gathered for a specific purpose.  If the first letter is a small church it means only one building.

Liberal means those who belong to the Liberal Party. Rather liberal means that it is liberal.

Cancer is a specific astronomical group or zodiac sign.  We use the word cancer to refer to disease cancer. 

It is well known that the Titanic was a huge shipwreck.  Minimizing the first letter means titanic only means gigantic.

See how this sentence looks like.

A turkey may march in Turkey in May or March!

Ref: WhatsApp 

Aravind T.. 

Wednesday, July 28, 2021

மனிதனின் ஆயுட்காலம் குறுக காரணங்கள்

மனிதனின் ஆயுட்காலம் குறுக காரணங்கள் 

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
2. இரவில் கண் விழித்திருத்தல்
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தையேனும்  உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

அரவிந்த் த. 

Sunday, June 27, 2021

கலியுக கணிப்புகள்


கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

    5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்

     நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். 
    இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். 

    பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.

     5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
      மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
     
    ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!...

    1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
     [பாகவத புராணம் 12.2.1]

    2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
     மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
     மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
     [பாகவத புராணம் 12.2.2]

    3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
     தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். 
     [பாகவத புராணம் 12.2.36)

    4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
     கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
     வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
     [பாகவத புராணம் 12.2.4]

    5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
     குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
     [பாகவத புராணம் 12.2.5]

    6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
     முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். 
    வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். 
    பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.6]

    7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். 
    தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். 
    [பாகவத புராணம் 12.2.7]

    8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
    இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
    (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.9]

    9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
     இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.10]

    10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
    [பாகவத புராணம் 12.2.11]

    11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். 
   [பாகவத புராணம் 12.3.42]

    12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
     நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
     [பாகவத புராணம் 12.3.41]

    13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
     தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
     தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். 
    [பாகவத புராணம் 12.3.38]

    14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
     இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
     நன்றிகடன் மறக்கப்படும். 
    [பாகவத புராணம் 12.3.36]

  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
       அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். 
     போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
   [பாகவத புராணம் 12.3.32]
************************************

   கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. 
    ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. 

    கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.

                மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.

     மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.

     கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

   கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.

     இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.

      அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்!.

      மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும்.

      ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.
          
WhatsApp பில் வந்த பதிவு நன்றி......


Saturday, May 29, 2021

எது கெடும்


அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... 

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும்  கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு..

 இன்று உலகில் சிந்தித்து செயல் படவேண்டிய விஷயங்களை தெளிவாக சொல்லியிருப்பது தமிழுக்கும் தமிழனுக்கும் இந்தியனுக்குமே பெருமை.

Ref : Facebook 

Thursday, April 29, 2021

பாகப் பிரிவினை


பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

*சரிசமமாக பிரித்து* *கொள்கிறோம் என்பது பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு* *குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு சென்று அந்த பாகப்பிரிவினை* *செல்லாது என்றும் நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம்.

எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூட, ஒருவருக்கு குறைய இருக்கலாம். ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும்.
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

பிரிக்க முடியாததை பிரித்தால், மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால்* அதனை, (NOT DIVISIBLE BY METERS AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது.
பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறலாம். 

(இப்பொழுது பாகப்பிரிவினை செய்து, தனித்தனி, பத்திரம் தேவையில்லை.).... என்று உதாரணத்திற்கு வைத்து கொள்வோம்...

பிரிக்க முடியாத சொத்தை, யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இல்லை, பகை முரண்களில் சகோதர, சகோதரிகள் சிக்கிக் கொண்டு அனைவரும் சொத்து எனக்கு வேண்டும் என்று சொன்னால், அந்த சொத்தை பொது ஏலத்திற்கு தான் கொண்டு வர வேண்டும். அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும்.

பாகம் பிரிக்கும் சொத்துக்களில் இருக்கும் கடன்களை, ஒருவர் மட்டும் மீட்டு இருந்தால், அதற்கான பணத்தை பெற அவருக்கு உரிமை உண்டு.
மேற்படி சொத்துக்களில் மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தோடு அதில் ஒரு மாடியோ, சுற்று சுவரோ கட்டி இருந்தால் அதற்கான பணத்தை பெறலாம்.

மற்ற பாகஸ்தரர்கள் முதலில் ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பங்கு கேட்பதும் முடியாத காரியம்.
பாகப்பிரிவினையில் எப்போது மூத்தவர்கள் தான் விட்டு கொடுக்க வேண்டும். இளையவர்களும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நம் முன்னோர் மரபு “வலுத்தவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே”! 

அதனால் வயதில் பெரியவர்களையே விட்டு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்.
சொத்தை பங்கிடும் போது கிழமேலாகவோ அல்லது தென் வடக்காகவோ பங்கிடலாம். அவ்வாறு பங்கிடும் போது கிழமேலிருந்தால் கிழக்கு ஓரத்தின் முதல் பங்கு கடைசி குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்தவர் அதற்கு அடுத்த பங்கு, இப்படியாக மேற்கு கடைசி பங்கு மூத்தவர் எடுத்து கொள்ளலாம். இதேபோல் வடக்கிலிருந்து பிரிக்கும் போது வடக்கின் முதல் பாகம் கடைசி தம்பிக்கும், தெற்கின் இறுதி பங்கு மூத்தவர்க்கும் கிடைக்கும்.
இளையவன் அதிக சலுகை பெற்றால் எதிர்காலத்தில் மூத்தவர்கள் வயதாகும் போது இளையவன் தோள் கொடுப்பான் என்று இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

பாகப்பிரிவினையில் பணத்தை வீணாக்காமல் இருக்க 11 வழி முறைகள்.....

சகோதர, சகோதரிகளிடையே இணக்கமும், அன்பும் இல்லாத இடத்தில் பாகபிரிவினையில், அதிக அளவு செலவுகள் ஆகும். மூத்தவர் இறுக்கி பிடித்தால் இளையவரும் இறுக்கிப் பிடிப்பார் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.

பங்குகளில் சச்சரவு இல்லாமல் பிரிக்க வேண்டும். எப்போதும் குடும்பத்தினருக்குள்ளேயே பேசி முடிக்க வேண்டும். யாருக்கு என்ன பங்கு என்று, வெளிநபரையோ, நாட்டாமையையோ, பெரிய மனுஷங்களையோ அறவே தவிர்க்க வேண்டும்.

பங்கு பிரிப்பதில் முரண்பாடுகள் அதிகம் இருந்தாலும் நிச்சயம் நீதிமன்றம் நாடக்கூடாது. பேசித் தீர்க்க வேண்டும். மிக மிக கடைசி வாய்ப்பாக கோர்ட்டை தீர்வாக நினைக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில், பெரிய மனுஷன்களை வைத்து பேச்சுவார்த்தையை நடத்தலாம்.

சகோதரர் சகோதரிகளிடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் பாகம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பக் கூடாது. முடிந்தவரை நேரில் சந்தித்து பேச வேண்டும். முடியவில்லை என்றால் நீங்களே கைப்பட பாகம் கேட்டு சகோதரர் சகோதரிகளுக்கு கடிதம் எழுதலாம்.

பாகப் பிரிவினை வேலையை செய்ய செலவு யார் செய்வது என தள்ளி போட்டால், நாள் தள்ள தள்ள செலவு கூடுமே தவிர நிச்சயம் செலவு குறையாது.

“பூனைக்கு யாராவாது மணிகட்ட வேண்டும்” என்ற எண்ணத்தில் யாராவது ஒரு சகோதரர் அல்லது சகோதரி முன் முயற்சி எடுக்க வேண்டும். அனைத்து சகோதரி சகோதர்களும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வேலையில் இருந்தாலும், இவர்களை ஒருங்கிணைக்க ஒருவர் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

பெரும்பாலும், குடும்ப நல்லது கெட்டதுகளில் கூடும்போது இந்த பாக பிரிவினைகளை முடித்துவிட வேண்டும். பாகப் பிரிவினைக்கு என்று ஒரு தனி சந்திப்பு என்பது வீணான செலவுகள்.
நிலவரி திட்ட சர்வே நடக்கும் போதோ , ஜமாபந்தியின் போதோ எளிதாக வருவாய் துறையின் ஆவணங்களில், அனைத்து பாகஸ்தாரர்களின் பெயரை சேர்த்து விடலாம். செலவு மிக குறைவு.

பெரும்பாலும் விவசாய நிலங்களை கூர்சீட்டு போட்டு கொள்ளலாம். தனிப்பட்டாவை அதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.
நகர சொத்துகளுக்கு மற்றும் அதிக மதிப்பு உள்ள சொத்துக்களுக்கு மட்டும், பாகவிரினை பத்திரம் போட்டு கொள்ளலாம்.

பாகப் பிரிவினையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

நீங்கள் வாங்கும் சொத்து பாக பிரிவினை மூலம் வந்து இருக்கிறது என்றால், பாகப்பிரிவினை பத்திரத்தையோ (அ) கூர் சீட்டையோ நன்கு படித்து பார்த்து சட்டப்படி யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று தெரிந்து கொண்டு, அந்த பங்கின் படி தான் நீங்கள் வாங்கும் சொத்து இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.

இதில் கொஞ்சம் கவனம் குறைந்து விட்டாலும் எதிர்காலத்தில் மற்றொரு பாகஸ்தர்களோ, அவர்களின் வாரிசுகளோ வழக்கு போடலாம். எனவே கீழ்க்கண்ட பட்டியலை எப்போதும் மனதில் வையுங்கள்.

இஸ்லாம் சட்டப்படி கணவன் இறந்தால் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

கணவன் இறந்தால்
கணவன் சொத்தில் மனைவிக்கு 1/8

பிள்ளைகளுக்கு
மீதி இருக்கும் பங்கு

பிள்ளைகளில் ஆண்களுக்கு
மீதியில் 2 பங்கு வீதம்

பிள்ளைகளில் பெண்களுக்கு
மீதியில் 1 பங்கு வீதம்

ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்
மீதியில் 1/2 பங்கு

ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
மீதியில் 2/3 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால்
மனைவிக்கு 1/4 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தாயாருக்கு
மீதியில் 1/3 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு
1/6 பங்கு

இஸ்லாம் சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

மனைவி இறந்தால், மனைவி சொத்தில் கணவனுக்கு
1/4 பங்கு

பிள்ளைகளுக்கு
மீதி உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்றால் மகன்களுக்கு
மீதி உள்ளதில் 2 பங்கு வீதம்

மகள்களுக்கு
மீதி உள்ளதில் 1 பங்கு வீதம்

ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்

மீதி உள்ளதில் 1/2 பங்கு

ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
தலா 2/3 பங்கு

மேற்படி மனைவி, வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டால்
½ பாகம்,( சரி பாதி கணவனுக்கு)

மனைவியின் தாயாருக்கு
மீதி சொத்தில் 1/3 பங்கு வீதம்

மனைவியின் தகப்பனார்ருக்கு (தாத்தா & பாட்டிக்கு)
1/6 பங்கு

கிறிஸ்தவ சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?

கணவன் இறந்தால் மனைவிக்கு
கணவரின் சொத்தில் 1/3 பங்கு

மகன்கள் மற்றும் மகள்களுக்கு
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கணவருக்கு வாரிசு இல்லையென்றால் 1/3 பங்கை மனைவி எடுத்து கொண்டு கணவனின் தந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தந்தையும் இல்லை என்றால் அவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் சரி சமமாக எடுத்து கொள்ளலாம்.

கிறிஸ்தவ சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?

மனைவி இறந்தால் அவரின் கணவருக்கு
மனைவியின் சொத்து கணவருக்கு சொத்தில் 1/3 பங்கு

மகன்கள் மற்றும் மகள்கள்
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறந்தவர் மனைவி வாரிசு இல்லை என்றால்....

கணவன் சொத்தில் 1/3 எடுத்து கொண்டு மீதி சொத்தை தந்தைக்கு கொடுத்து விட வேண்டும்.

மேற்படி தந்தை இல்லை என்றால் மேற்படி சொத்து தாயாருக்கோ அல்லது சகோதர சகோதரிக்கோ சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.

இந்து சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

கணவன் இறந்தால் அவருடைய முதல் வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.

கணவரின் முதல் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளில் தந்தை மட்டும் முழு சொத்தையும் அடையலாம்.

கணவரின் இரண்டாம் வாரிசுகளில் தந்தை இல்லையென்றால் மீதி உள்ள இரண்டாம் வாரிசுகள் அனைவரும் அனைவருக்கும் சம பங்கு அடையலாம்.

இரண்டாம் வாரிசுகளில் சிலர் உயிருடன் இருந்து சிலர் உயிருடன் இல்லையென்றால் உயிருடன் இல்லாதவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் எந்த வித பங்கும் கிடையாது.

இரண்டாம் வாரிசுகளில் தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் யாருமே உயிருடன் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளின் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும் .

இந்து சட்டப்படி கணவனின் முதல் வாரிசுகள் யார் யார் ?

1. தாய்
2. மனைவி
3. மகன்
4. மகள்
5. முன்னரே இறந்த மகனின் குழந்தை
6. முன்னரே இறந்த மகளின் குழந்தை
7. இறந்த மகனின் விதவை மனைவி

இந்து சட்டப்படி கணவனின் இரண்டாம் வாரிசுகள் யார் யார் ?

1. தந்தை
2. தந்தை இல்லையென்றால் உயிருடன் இருக்கும் சகோதர சகோதரிகள்
3. சகோதர சகோதரிகள் யாரும் உயிருடன் இல்லையென்றால் அவர்களின் வாரிசுகள்

இந்து சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

மனைவி இறந்தால் அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.

மனைவியின் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகளுக்கு சம பங்கு.

கணவனின் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தகப்பனார் வாரிசுகள் சம பங்கு அடைவார்கள்.

மனைவியின் தகப்பனார் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தாயார் வாரிசுகள் அடைவார்கள் சம பங்கு அடைவார்கள் .

மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து மனைவியின் சுய சம்பாத்தியமாக இருந்தால் கணவனுக்கும் கணவனின் வாரிசுகளுக்கும் முழுமையாக சென்றடையும் .

மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து சீதனமாக தந்தையார் வழியில் வந்திருந்தால், மேற்படி சொத்து கணவனுக்கும் கணவனின் வாரிசுக்கும் சேராது . திரும்ப தந்தையார் வாரிசுகளுக்கு சென்று விடும்.

இந்து சட்டப்படி மனைவிக்கு முதல் வாரிசுகள் யார் யார் ?

1. பெண்ணின் மகன்கள்
2. பெண்ணின் மகள்கள்
3. முன்னரே இறந்த மகனின் குழந்தைகள்
4. முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்
5. கணவர்

…………………………………………………………………………………………………..

தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்....

ஒரே குடும்பத்தினர் பாகபிரிவினை பத்திரம்:

“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது 

‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும் தான்), 

தந்தை, 
தாய், 
மகன், 
வளர்ப்பு மகன், 
மகள், 
வளர்ப்பு மகள், 
பேரன்,
 பேத்தி, 
சகோதரன், 
சகோதரி” 

ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். 

(இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள்) என்று பத்திரபதிவு அலுவலகம் சொல்கிறது .

பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது...

1. பூர்வீகச் சொத்தாக இருந்தாலும்
,
2. நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,

3. பெற்றோர்கள் இறந்த பின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்

மேற்படி பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும்.

ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சொத்தின் மதிப்பு ரூ..25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ..25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.

குடும்ப உறுப்பினர் அல்லாத பாகபிரிவினை பத்திரம்....

குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டு விட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.)

பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

3.கூர்சீட்டு (வாய்மொழி பாகப்பிரிவினை பத்திரம்)

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும் போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம்.

அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு பங்கு பிரித்த படியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது.

எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.

இருந்த போதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம்.

இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம்.

அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம்.

அதற்குப் பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும்.

ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

நன்றி.

Ref: Facebook 

Monday, March 29, 2021

ஆரோக்கியம் காப்போம்



1) காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2) 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3) இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப் பை பயப்படுகிறது.

4) ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

5) நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

6) சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

7) அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

8) அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

9) சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

10) இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

11) எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.

உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள்.

இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை.

அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது.

எனவே நம் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

நன்றி... 
ஆரோக்கியம் காப்போம்...

Ref: WhatsApp 

Sunday, February 28, 2021

School Days

ᴅᴏ ʏᴏᴜ sᴛɪʟʟ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴛʜᴏsᴇ ᴀᴡᴋᴡᴀʀᴅ ᴅᴀʏs ɪɴ sᴄʜᴏᴏʟs ᴅᴜʀɪɴɢ ᴇxᴀᴍs?


ᴡʜᴇɴ ᴀ ʙʀɪɢʜᴛ sᴛᴜᴅᴇɴᴛ ᴛᴇʟʟs ᴛʜᴇ ɪɴᴠɪɢɪʟᴀᴛᴏʀ ᴛʜᴀᴛ ǫᴜᴇsᴛɪᴏɴ 4 ʜᴀs ᴀ ᴘʀᴏʙʟᴇᴍ, ʙᴜᴛ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ᴀʟʀᴇᴀᴅʏ ᴀɴsᴡᴇʀᴇᴅ ɪᴛ...😳😜

ᴡʜᴇɴ ᴀ ғᴇʟʟᴏᴡ sᴛᴜᴅᴇɴᴛ ᴀsᴋs ғᴏʀ ᴀ ɢʀᴀᴘʜ ᴘᴀᴘᴇʀ, ʙᴜᴛ ʏᴏᴜ ᴀʀᴇ ғɪɴɪsʜᴇᴅ ᴀɴᴅ ᴅɪᴅ ɴᴏᴛ sᴇᴇ ᴀɴʏᴡʜᴇʀᴇ ᴡʜᴇʀᴇ ɪᴛ ᴡᴀs ʀᴇǫᴜɪʀᴇᴅ...😧 😁😁

ᴡʜᴇɴ ᴛʜᴇ ɪɴᴠɪɢɪʟᴀᴛᴏʀ sᴀʏs ᴊᴜᴍᴘ ǫᴜᴇsᴛɪᴏɴ 6 ᴡᴇ ᴡɪʟʟ ʀᴇᴄᴛɪғʏ ɪᴛ ʟᴀᴛᴇʀ, ʙᴜᴛ ɪᴛ ᴡᴀs ᴛʜᴇ ǫᴜᴇsᴛɪᴏɴ ʏᴏᴜ ᴇɴᴊᴏʏᴇᴅ ᴍᴏsᴛ ᴡʜᴇɴ ᴀɴsᴡᴇʀɪɴɢ...😟 😱😲

ᴡʜᴇɴ ʏᴏᴜ sᴇᴇ ᴘᴇᴏᴘʟᴇ ʙᴜsʏ ᴜsɪɴɢ ʀᴜʟᴇʀs ᴀɴᴅ ʏᴏᴜ ᴀʀᴇ ᴡᴏɴᴅᴇʀɪɴɢ ᴡʜᴀᴛ ɪs ɢᴏɪɴɢ ᴏɴ...😣😫😫

ᴡʜᴇɴ ʏᴏᴜ ʜᴇᴀʀ ʏᴏᴜʀ ғʀɪᴇɴᴅs ᴀʀɢᴜɪɴɢ ᴀғᴛᴇʀ ᴛʜᴇ ᴇxᴀᴍ ᴡʜᴇᴛʜᴇʀ ᴛʜᴇ ᴀɴsᴡᴇʀ ᴛᴏ ǫᴜᴇsᴛɪᴏɴ 5 ᴡᴀs 35.5% ᴏʀ 36.5% ᴀɴᴅ ʏᴏᴜʀ ᴀɴsᴡᴇʀ ᴡᴀs 1,800... 😩😏

ᴛʜᴇ ᴄʀᴇᴀᴍ. ᴡʜᴇɴ ᴛʜᴇ ᴏᴛʜᴇʀ sᴛᴜᴅᴇɴᴛs ᴀsᴋᴇᴅ ғᴏʀ 4-5 ᴀᴅᴅɪᴛɪᴏɴᴀʟ ᴀɴsᴡᴇʀ sʜᴇᴇᴛs ᴀɴᴅ ʏᴏᴜ ʜᴀᴅ ᴛᴡᴏ ᴘᴀɢᴇs ᴇᴍᴘᴛʏ ɪɴ ᴛʜᴇ ᴍᴀɪɴ ᴀɴsᴡᴇʀ sʜᴇᴇᴛ...😨😰😱

sᴇᴇ ᴡʜᴇʀᴇ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ʀᴇᴀᴄʜᴇᴅ ɪɴ ʟɪғᴇ ɪɴsᴘɪᴛᴇ ᴏғ ᴛʜᴏsᴇ ᴍᴏᴍᴇɴᴛs...ᴛʜɪɴɢs ᴀʀᴇ ɴᴏᴛ ᴘᴇʀᴍᴀɴᴇɴᴛ...ᴇɴᴊᴏʏ ʟɪғᴇ! 😃😃

ᴏɴʟʏ ғᴏʀ ᴛʜᴏsᴇ ᴡʜᴏ ᴇɴᴊᴏʏᴇᴅ ᴛʜᴇɪʀ sᴄʜᴏᴏʟ ʟɪғᴇ...😂😂😂

*ᴛᴏᴘ 10 ᴅɪᴀʟᴏɢᴜᴇ ᴏғ ᴛᴇᴀᴄʜᴇʀ:*
👉 ɪғ ʏᴏᴜ ᴀʀᴇ ɴᴏᴛ ɪɴᴛᴇʀᴇsᴛᴇᴅ ᴛʜᴇɴ ʏᴏᴜ ᴍᴀʏ  ʟᴇᴀᴠᴇ ᴛʜᴇ ᴄʟᴀss.
👉 ᴛʜɪs ᴄʟᴀss ɪs ᴡᴏʀsᴇ ᴛʜᴀɴ ᴀ ғɪsʜ ᴍᴀʀᴋᴇᴛ.
👉 ᴀʀᴇ ʏᴏᴜ ʜᴇʀᴇ ᴛᴏ ᴡᴀsᴛᴇ ʏᴏᴜʀ ᴘᴀʀᴇɴᴛs ᴍᴏɴᴇʏ? 
👉 ᴛᴇʟʟ ᴍᴇ ᴡʜᴇɴ ʏᴏᴜ ᴀʟʟ ʜᴀᴠᴇ ғɪɴɪsʜᴇᴅ ᴛᴀʟᴋɪɴɢ.
👉 ᴡʜʏ ᴀʀᴇ ᴜ ʟᴀᴜɢʜɪɴɢ? ᴄᴏᴍᴇ ʜᴇʀᴇ ɴ ᴛᴇʟʟ ᴜs ᴡᴇ'ʟʟ ᴀʟsᴏ ʟᴀᴜɢʜ. 
👉 ᴅᴏ ʏᴏᴜ ᴛʜɪɴᴋ ᴛᴇᴀᴄʜᴇʀs ᴀʀᴇ ғᴏᴏʟs ᴛᴏ ᴛᴇᴀᴄʜ ʏᴏᴜ?
👉 ᴅᴏɴ'ᴛ ᴛʀʏ ᴛᴏ ᴀᴄᴛ ᴏᴠᴇʀsᴍᴀʀᴛ ᴡɪᴛʜ ᴍᴇ.
👉 ᴡʜʏ ᴅᴏ ᴜ ᴄᴏᴍᴇ ᴛᴏ sᴄʜᴏᴏʟ ᴡʜᴇɴ ʏᴏᴜ ᴅᴏɴ'ᴛ ᴡᴀɴᴛ ᴛᴏ sᴛᴜᴅʏ.
👉 ᴛʜᴇ ᴘʀᴇᴠɪᴏᴜs ʙᴀᴛᴄʜ ᴡᴀs 100 ᴛɪᴍᴇs ʙᴇᴛᴛᴇʀ ᴛʜᴀɴ ʏᴏᴜʀs.
👉 ɪғ ʏᴏᴜ ᴡᴀɴᴛ ᴛᴏ ᴛᴀʟᴋ ᴛʜᴇɴ ᴜ ᴍᴀʏ ɢᴇᴛ ᴏᴜᴛ ғʀᴏᴍ ᴛʜᴇ ᴄʟᴀss.

ᴀɴᴅ ᴛʜᴇ ʙᴇsᴛ ᴏɴᴇ
👉 ʏᴏᴜ, ʏᴇs ʏᴏᴜ...  ɪ ᴀᴍ ᴛᴀʟᴋɪɴɢ ᴛᴏ ʏᴏᴜ ᴏɴʟʏ, ᴅᴏɴ'ᴛ ʟᴏᴏᴋ ʙᴀᴄᴋ... 😄😄

ɪ'ᴍ sᴜʀᴇ ᴛʜᴀᴛ ᴛʜᴇ ʟᴀsᴛ ʟɪɴᴇ ᴍᴀᴅᴇ ᴀʟʟ ᴏғ ʏᴏᴜ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴀɴᴅ sᴍɪʟᴇ .
ᴛʜɪs ᴡᴀs ᴏᴜʀ sᴄʜᴏᴏʟ ᴅᴀʏs. 
ᴛʜᴇ ʙᴇsᴛ ᴘᴀʀᴛ ᴡᴀs ᴛʜᴀᴛ ᴡᴇ ᴜsᴇᴅ ᴛᴏ ʜᴀᴠᴇ ᴛʜᴇ ᴍᴏsᴛ ɪɴɴᴏᴄᴇɴᴛ ғᴀᴄᴇ ᴛᴏ sʜᴏᴡ ᴀᴛ ᴛʜᴀᴛ ᴘᴏɪɴᴛ...😂😂 

Missing those days badly... 
Ref : WhatsApp share

Aravind T. 

Thursday, January 28, 2021

மாற்றம் அன்றும் இன்றும்

அன்று 
வீடு நிறைய குழந்தைகள் 
இன்று 
வீட்டுக்கொரு குழந்தை 

அன்று 
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
இன்று 
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

அன்று 
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி 
இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி 

அன்று
படித்தால் வேலை
இன்று 
படிப்பதே வேலை

அன்று 
வீடு நிறைய உறவுகள்
இன்று 
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை

அன்று  
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு

அன்று
முதுமையிலும் துள்ளல்
இன்று
இளமையிலேயே அல்லல்

அன்று 
உதவிக்கு தொழில் நுட்பம்
இன்று
தொழில் நுட்பம் தான் எல்லாம்

அன்று 
யோக வாழ்க்கை
இன்று
எந்திர வாழ்க்கை 

அன்று 
படங்களில் ஒரு குத்து பாட்டு
இன்று
குத்து பாட்டில் தான் படமே

அன்று  
ஓடினோம் வயிற்றை நிறைக்க 
இன்று 
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

அன்று
பெரியோர்கள் பாதையில்
இன்று 
இளைஞர்கள் போதையில் 

அன்று  
ஒரே புரட்சி 
இன்று 
ஒரே வறட்சி

அன்று 
சென்றார்கள் வளர்ச்சியில்
இன்று
செல்கிறது சினிமா கவர்ச்சியில்

அன்று 
ஊரே கூட கோலாகல விழா
இன்று
ஊருக்கே போக முடியாத மூடுவிழா 

அன்று
கைவீசி நடந்தோம்
இன்று
கைப்பேசியுடன் நடக்கிறோம்

அன்று 
ஜனநாயகம்
இன்று
பணநாயகம்

அன்று 
விளைச்சல் நிலம்
இன்று
விலை போன நிலம்

அன்று 
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
இன்று
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

அன்று 
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று
நடக்குது வெற்று நிகழ்ச்சி 

🦋 அன்று
வாழ்ந்தது  வாழ்க்கை

🦀 இன்று
ஏதோ வாழும் வாழ்க்கை.

படித்ததில் பிடித்தது...

அரவிந்த் த.