அறிவியலே அறிய முடியாத மர்மம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.
எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.
பஞ்சபூத ஸ்தலம்: நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில் காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)
2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)
3) ஸ்ரீ காலஹஸ்தி – ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)
4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)
5) திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)
6) திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)
7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)
8) ராமேஸ்வரம் – ராமநாத கோயில் (9.2881, 79.3174)
கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Aravind T..
Good one
ReplyDeleteRaksha Bandhan Quotes
Raksha Bandhan Quotes in Hindi
Raksha Bandhan Quotes for Sister
Raksha Bandhan Quotes for Brother