Thursday, September 17, 2020

கால மாற்றம்

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக  ஏங்கி இருக்கிறேன். 
 
இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை.

அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து,  வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை. 

அலுவலகம் மற்றும்  வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி !

சோஃபாவும் அப்படித்தான்!

பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட,   என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !

6 GB RAM, quardcore processor, 128 GB in built memory என்று அனைத்துமே பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன்.

ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு  வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி. ஆனால்  இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் .... மொத்தத்தில் வாரத்திற்கு சில மணிநேரம் டிவி பார்த்தாலே அது  பெரிய விஷயம் !

கால மாற்றம்.... இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட  செலுத்தியாகிவிட்டது. எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை... பயன்படுத்துவதும் இல்லைன்னு....வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன்...அப்படித்தான்  ஆகிப்போச்சி பொழப்பு.

அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.

எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது.

இது ஒரு டூப்ளிகேட் வாழ்க்கை 
என்று உணர முடிகிறது. 

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில் தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடும்.!

இப்படியாக பல சுய பரிசோதனைகளின்  வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. உணர்த்தவும் செய்தது.

நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று ஒருமுறை சரி பார்த்துக்கொண்டு,
ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ 
நமது பழைய மனதுக்குப்பிடித்த 
நெருக்கமான வாழ்வைத்தான்!

படிச்சவங்களுக்கு புரியுதோ புரியலையோ
அனுபவிச்சங்க இதை
கண்டிப்பா உணருவாங்க...

Ref : WhatsApp Message 

அரவிந்த் த. 

Wednesday, August 26, 2020

Great Place To Work - Allianz Services India

Great Place To Work - Allianz Services India


Aravind T.

Monday, August 03, 2020

குமரி அன்னைக்கு


முக்கடல் கூட்டி பேரலை முழங்கி
மூக்குத்தி அணிபூண்ட கன்னி அன்னையை வணங்கி
அழியா பொற்குறள் நெறிவகுத்த
அய்யன் வள்ளுவன் கற்சிலை தாள் வணங்கி
முச்சங்கத்து முதற்சங்கம் கூட்டிய
மூத்தக்குடி பெருமான் நினைவுகள் வணங்கி
விஞ்சிய கடல் விழுங்கிய பெருநிலத்தின்
எஞ்சிய குறுநிலத்து நின்று திமிறும் தமிழ் வணங்கி
இடநாடும் நாஞ்சில் திருநாடும்
இணைந்தமைந்த எம் மூதாதையர் மண் வணங்கி
பாடுவோம் குமரிநிலத்தாய் புகழ் ஓங்கி முழங்கி

முத்திசை சூழ்ந்து கடலலை ஆட
வடதிசை அரணாய் மேற்கு தொடர்மலை நிற்க
ஆரல்வாய்மொழி கணவாயில் தலைவாசல் வைத்த
நாற்றிணை நிலங்களணிந்தவள் நளினம் காணீர்
கோதையும் பரளியும் ஆரணி அலைந்து
கோமகள் தாமிரபரணியாய் தவழும்
கொள்ளை அழகுக்கு ஈடிணை ஏதோ
மூலிகை காப்பக மருந்துவாழ் மலையும்
அகத்திய சித்தர் வாழ்ந்த குகையும்
கொண்டவள் கோலப் பொலிவை காணீர்

இரப்பர் மரங்களும் மிளகுக் கொடிகளும்
தேனூறும் மா பலா வகைகளும் பலவாய்
தென்னையும் வாழையும் மரசீனிக்கிழங்கும்
அருகிய நெடுந்துயர் பனைமர நுங்கும்
அக்கானியும் அகம்குளிர் கள்ளும்
முப்போக நெல்லும் அன்னையின் அடையாளங்கள்
சுவையான மீனுக்கும்
சுத்தமான தேனுக்கும் சொந்தக்காரி

போர்மூண்ட குளச்சல் கடல்துறைமுகத்தில்
போர்த்துகீசியன் தலைகொய்த வெற்றித் தூணும்
கர்மவீரன் காமராசன்
கட்டிய தண்ணீர் தொட்டிப்பாலமும்
பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளும்
ஆழமான சானலின் கரைகளும்
புத்தேரியின் பெருங்குளமும்
தோவாளை பூச்சந்தையும்
சிவாலயங்கள் பன்னிரெண்டு
முருகனுக்கும் பலவுண்டு
பகவதி அன்னைக்கும்
நாகராஜனுக்கும் கோயில்களுண்டு
வங்காள சிங்கம் விவேகானந்த சுவாமிக்கும்
கடலிடை பாறையில் மண்டபம் கண்டாள்
தூய சவேரியாருக்கு கோட்டாறு ஆலயம்
தூய தேவ சகாயம் பிள்ளையின்
குருதி படிந்த திருத்தலங்கள்
நேசமணி போக்குவரத்து கழகம்
பயணியர் பையில் பொதிச்சோறும்
அழகுத்தனித்துவ வழக்காடு தமிழும்
நித்திலமே கேள் எம்மன்னையின் பெருமை
எத்தனையெத்தனை எவரறிவாரோ

ஆய் அரசாய் ஆண்டார் அவளை
வேணாடாய் ஆண்டார்
மூவேந்தர் முக்கோனும் மாறிமாறி ஆண்டார்
திருவிதாங்கோட்டு வர்மாக்கள் முடிவாய் ஆண்டார்

அந்நாளில் கயவர் சாதிப்படிநிலை செய்து
அன்னை தன் முலைமூட உரிமை மறுத்தார்
அய்யா வைகுண்டரை அவதரிக்க செய்து
சாமித்தோப்பில் சமபந்தி வைத்தாள்
நீலகண்ட பிள்ளையை பெற்று
காற்றாடி மலையில் பலியிடக்கொடுத்தாள்
நீண்டு நீண்ட ஆண்டுகளோடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறில்
தாய்வீட்டு சொந்தம் தேடிக்கொண்டாள்
மதம் இனம் கடந்து தன் மக்களையெல்லாம்
மகத்தாய் ஒற்றுமையில் காத்துவைத்தாள்
உலகதரமிக்க திறன்களை திரட்டி
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஊட்டிவிட்டாள்
உன்னதமிக்க மாவட்டமென்று
அன்னைக்கு பிள்ளைகள் மகுடம் செய்தனர்

மீண்டுமிதோ இங்கொரு நாளில்
அகங்காரம் கொண்டு சில மாந்தர் வந்து
மதமூட்டி பேதமை பகையுமூட்டி
அன்னையை ஆயர்குல வணிகருக்கு விற்று
ஆதாயம் தேட முற்படுங்கால்
அன்னையின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம்
கன்னியின் வனப்பை காத்திடுவோம்
என்றுமென்றும் பாடிடுவோம் ஒன்றாய்
குமரிநிலத்தாய் புகழ் ஓங்கி முழங்கி.

Ref : ஆஸ்வால்ட் ஹோப்பர் (தோழர்)

அரவிந்த் த. 

Wednesday, July 29, 2020

உறவுகளை வளர்ப்போம்


உறவுகள் குடும்பம் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கின்ற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள்...

சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்தாலும் அணியவியலாது. அதுபோல குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது மேன்மையாக இருக்காது...

உறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தன் மகனுக்கு உடல் நலமில்லாவிட்டால் தாய்க்கும், தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது...

வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகமெல்லாம் மலர்ச்சி...

மகிழ்ச்சி, காரணம் குருதிசார் உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வு தான்...

தாத்தா-பாட்டி, சித்தி- சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்காள்- தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது...

அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகின்றனர். அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர்...

அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும் பொழுது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன...

சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும் போது மனவலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. உறவுகளின் மேன்மை...

இன்றைய சூழலில் பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. நேரமில்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம்....

என்ன காரணம்...?

வசதிகளும், வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன...

அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது...

பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது...

தன் நலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும்,  ‘மனிதம்’ காணாமல் போய் விடும் அபாயத்தை உணர்த்துகின்றன...

ஆம்., ஒரு மரம் தளிர்க்க நல்ல நிலமும் நீரும் தேவைப்படுவது போல மனித வாழ்வு சிறக்க உறவு முறைகளின் அன்பும் அரவணைப்பும் அவசியம்...

ஆம் நண்பர்களே...!

உறவுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது...

ஒருவருக்காக ஒருவர் உருகித் தவித்து அன்பு செலுத்தும் வீட்டில் தான் ஆனந்தம் அமைதி கொள்கிறது...

அன்பு கொண்ட உள்ளத்தை விட உலகில் உயர்ந்தது வேறென்ன...? அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள் தான் வாழ்க்கையை மேன்மையாக்கும்...!

உறவுகளை வளர்ப்போம்...! மேன்மையுடனே வாழ்வோம்...!!

- அரவிந்த் த. 



🌺🌺🌺🙏🏻💐💐💐💐💐💐💐

Sunday, June 28, 2020

Covid Medi Kit

Covid Medi kit required at home:

1. Paracetamol
2. Betadine for mouthwash and gargle
3. Vitamin C and D3 
5. B complex 
6. Vapour+ capsules for steam
7. Oximeter 
8. Oxygen cylinder (for emergency only)
9. arogya Setu app 
10.Breathing Exercises 

Covid Three stages:
1. Covid only in nose - recovery  time is half a day. (Steam inhaling), vitamin C. Usually no fever. Asymptomatic. 
2. Covid in throat - sore throat, recovery time 1 day (hot water gargle, warm water to drink, if temp then paracetamol. Vitamin C, Bcomplex. If severe than antibiotic. 
3. Covid in lungs- coughing and breathlessness 4 to 5 days. (Vitamin C, B complex, hot water gargle, oximeter, paracetamol, cylinder if severe, lot of liquid required, deep breathing exercise.
Stage when to approach hospital:
Monitor the oxygen level. If it goes near 43 (normal 98-100) then you need oxygen cylinder. If available in Society then no hospital else admit.

God bless you all 🙏
Ref : WhatsApp forwarded 

Aravind T. 

Wednesday, May 27, 2020

என்னவாயிற்று தமிழர்களுக்கு?

#என்னவாயிற்று தமிழர்களுக்கு?

 
பணப்புழக்கம்.
ஏன் இங்கு இல்லை.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் ஏன் எது?

தமிழர்கள்  உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு சாராயம் மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன்அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன் வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது  இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான் அன்று புரியும்.

ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெயிலர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர் மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.

தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர் அவரிடம் பேசினோம் அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிருகிருத்தது,

.மாதம் மாதம் 10.000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் 

வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவர் மாதம் 10.000.அனுப்புகிறார் 

இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம் 

நூறுபேர் அனுப்பினால் #ஒருகோடி 

ஆயிரம் பேர் அனுப்பினால் #பத்துகோடி 

ஒரு லட்சம் பேர் அனுப்பினால் #ஆயிரம்கோடி 

மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன் தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு #திருப்பூரில்_மூனுலட்சம் பேரும் #கோவையில்_ஏழுலட்சம் பேரும் #சென்னையில்_20.பது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான் 

சென்னை கோவை திருப்பூர் மட்டும் கனக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவர் மாதம் மாதம் 10.த்தாயிரம் என்றால் 30.லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்க்லேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது 

மாதம் மாதம் 3.000.கோடி என்றால் வருடத்திற்கு 36.000.கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் #புழக்கத்தில் இருந்தால் அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய #இந்தப்பணம் #வடமாநிலங்களில் புலங்கிக் கொண்டுருக்கிறது அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டுருக்கிறது 

இது வெரும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு மீதம் இருக்கும் 36 மாவட்டத் திலும். வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம் 

இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள் முதலாளிகள் போன்றோர்களை கனக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.

இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில் எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது அதனால் லட்சக்கணக்கான பொருட்கள் அதாவது உளி சுத்தியல் ஆரம்பித்து  மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.

சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் அழிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது இதை தமிழன் எப்போது உணர்வது.?. 

மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது,களை எடுத்தல், அறப்பு அருத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள் இனி என்னாகும் யோசியுங்கள்.

பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனக்கு எதிரான இந்தப் #பொருளாதாரப்போராட்டம் தொடர்ந்து நாம் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும் #தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்.?.

வாழ்க தமிழ். 
வாழ்க தமிழ்நாடு. 
வாழ்க தமிழ் மக்கள்.
என்று கூறி கொண்டு நாம்மை அழிக்கும் கூட்டம் எப்போது ஒழியும்.

பதிவிட்டவர் விபரம் தெரியவில்லை.

ஆனால் கருத்தில் உண்மை உள்ளது.


Tuesday, April 21, 2020

Scary alphabet 'C'

No one expected that the alphabet "C"  would play a Scarry role...

Coronavirus (C) 
Covid-19 (C) 
Case (C)
Confirmed (C)
Confinement (C)
Contamination (C)
Containment (C)
Curfew (C)

The most serious "Cs" are, 
Cemetery  (C)
Cremation (C)

The possible remedial drug is, 
Chloroquine (C) 
The beauty is, it started from China (C).

But at the same time, Cleanliness (is the remedy.) 
Courage (is the need of the hour.)

Compliance to the expert advice ...
Contention to overcome the crisis ... 

Clarity of thought. ..
Cooperation with the fellow beings... 
Caring the needy...
Etc...etc...

and finally the "Clearance"
is awaited...
in a Short while...

And definitely looking forward to a

Cure

Aravind T 

Thursday, March 26, 2020

கொரோனா ஆச்சரியமானது

கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள், அலறல்கள், கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது

ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்குச் சொல்கின்றது

1950க்கு பின் வேகமாக மாறிய உலகமிது அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது

குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும், மனமும், குணமும், பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருக்கிறது

உலகில் உள்ள உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், 
அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது

பார்கள் நிரம்பி வழிந்தன ,, தியேட்டர்கள் நாளை காலை படம் பார்க்க இன்றே வரிசையில் நின்றார்கள்,, கேளிக்கை விடுதிகள் விடுமுறையில்லாமல் இயங்கின.. மஜாஜ் சென்டர் புல் பிசி ,, நடிகர்கள் நான் சொல்வது தான் மக்கள் கேக்கணும் என்று ஆணவத்துடன் இருந்தார்கள்

அப்படி இருந்த உலகின் இன்றைய நிலை

இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்

ஆம், பப்கள் என இரவெல்லாம் குடியும் ஆட்டமும், பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன,

மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது

மது குடி மையங்கள் மூடிக்கிடக்கின்றன, 
மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன‌

இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடிக் கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றனர்

அவர்களை ஆட்டி வைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன‌

ஐரோப்பிய நிலை இன்ன்னும் மோசம்

ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களைத் தாங்களே குணமாக்குகின்றனர்

அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை

பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புக்கொள்கின்றது மங்கையர் இனம்

அரை டவுசர் போடும் வெள்ளைக்காரி முதல் புடவைக்காய் சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மங்கையருக்கும் அவரவருக்கான உண்மை தேவை புரிகின்றது

ஆடம்பரம், ஆட்டம், பாட்டம், வெட்டி பந்தா
நிலையா அழகு வற்றிவிடும் செல்வம் என பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது

பணம் , பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது 
மழலைக் கூட்டம்,

நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்

பாவகாரியங்கள் விலக்கப்படுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடப்படுகின்றன‌

தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று

அண்டார்டிக்கா பனிப்பாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று

ஆட்டமும், பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால் விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்து விட்டது காலம்

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், 
எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

தன் திட்டம்/ கனவு/ வேகம்/ ஆசை/ எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டு வரும் பாகனைப் போல மனிதனைக் கட்டி வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றது காலம்

ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணாங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்

தமிழகம் முருகப் பெருமானையும், அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது

ஐரோப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது

சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறிக் கூட்டம்

காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. காலம். நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தைச் சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்

அதில் மெல்ல ஞானம் பெற்றுக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக காலத்துக்குத் தெரியாதா என்ன?


Saturday, March 21, 2020

Tuesday, February 11, 2020

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴡᴀɴᴛᴇᴅ ᴛᴏ ʜᴀᴠᴇ ᴄʜɪʟᴅʀᴇɴ. ᴛᴏᴅᴀʏ ᴍᴀɴʏ ᴘᴇᴏᴘʟᴇ ᴀʀᴇ ᴀғʀᴀɪᴅ ᴏғ ʜᴀᴠɪɴɢ ᴄʜɪʟᴅʀᴇɴ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴄʜɪʟᴅʀᴇɴ ʀᴇsᴘᴇᴄᴛᴇᴅ ᴛʜᴇɪʀ ᴘᴀʀᴇɴᴛs. ɴᴏᴡ ᴘᴀʀᴇɴᴛs ʜᴀᴠᴇ ᴛᴏ ʀᴇsᴘᴇᴄᴛ ᴛʜᴇɪʀ ᴄʜɪʟᴅʀᴇɴ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴍᴀʀʀɪᴀɢᴇ ᴡᴀs ᴇᴀsʏ ʙᴜᴛ ᴅɪᴠᴏʀᴄᴇ ᴡᴀs ᴅɪғғɪᴄᴜʟᴛ. ɴᴏᴡᴀᴅᴀʏs ɪᴛ ɪs ᴅɪғғɪᴄᴜʟᴛ ᴛᴏ ɢᴇᴛ ᴍᴀʀʀɪᴇᴅ ʙᴜᴛ ᴅɪᴠᴏʀᴄᴇ ɪs sᴏ ᴇᴀsʏ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴡᴇ ɢᴏᴛ ᴛᴏ ᴋɴᴏᴡ ᴀʟʟ ᴛʜᴇ ɴᴇɪɢʜʙᴏʀs. ɴᴏᴡ ᴡᴇ ᴀʀᴇ sᴛʀᴀɴɢᴇʀs ᴛᴏ ᴏᴜʀ ɴᴇɪɢʜʙᴏʀs.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴘᴇᴏᴘʟᴇ ʜᴀᴅ ᴛᴏ ᴇᴀᴛ ᴀ ʟᴏᴛ ʙᴇᴄᴀᴜsᴇ ᴛʜᴇʏ ɴᴇᴇᴅᴇᴅ ᴛʜᴇ ᴇɴᴇʀɢʏ ᴛᴏ ᴡᴏʀᴋ ʜᴀʀᴅ. ɴᴏᴡ ᴡᴇ ᴀʀᴇ ᴀғʀᴀɪᴅ ᴛᴏ ᴇᴀᴛ ғᴀᴛᴛʏ ғᴏᴏᴅs ғᴏʀ ғᴇᴀʀ ᴏғ ᴛʜᴇ ᴄʜᴏʟᴇsᴛᴇʀᴏʟ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴠɪʟʟᴀɢᴇʀs ᴡᴇʀᴇ ғʟᴏᴄᴋɪɴɢ ᴛᴏ ᴛʜᴇ ᴄɪᴛʏ ᴛᴏ ғɪɴᴅ ᴊᴏʙs. ɴᴏᴡ ᴛʜᴇ ᴛᴏᴡɴ ᴘᴇᴏᴘʟᴇ ᴀʀᴇ ғʟᴇᴇɪɴɢ ғʀᴏᴍ ᴛʜᴇ sᴛʀᴇss ᴛᴏ ғɪɴᴅ ᴘᴇᴀᴄᴇ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴡᴀɴᴛᴇᴅ ᴛᴏ ʙᴇ ғᴀᴛ ᴛᴏ ʟᴏᴏᴋ ʜᴀᴘᴘʏ ... ɴᴏᴡᴀᴅᴀʏs ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴅɪᴇᴛs ᴛᴏ ʟᴏᴏᴋ ʜᴇᴀʟᴛʜʏ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ʀɪᴄʜ ᴘᴇᴏᴘʟᴇ ᴘʀᴇᴛᴇɴᴅᴇᴅ ᴛᴏ ʙᴇ ᴘᴏᴏʀ. ɴᴏᴡ ᴛʜᴇ ᴘᴏᴏʀ ᴀʀᴇ ᴘʀᴇᴛᴇɴᴅɪɴɢ ᴛᴏ ʙᴇ ʀɪᴄʜ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴏɴʟʏ ᴏɴᴇ ᴘᴇʀsᴏɴ ᴡᴏʀᴋᴇᴅ ᴛᴏ sᴜᴘᴘᴏʀᴛ ᴛʜᴇ ᴡʜᴏʟᴇ ғᴀᴍɪʟʏ. ɴᴏᴡ ᴀʟʟ ʜᴀᴠᴇ ᴛᴏ ᴡᴏʀᴋ ᴛᴏ sᴜᴘᴘᴏʀᴛ ᴏɴᴇ ᴄʜɪʟᴅ.

25 ʏᴇᴀʀs ᴀɢᴏ, ᴘᴇᴏᴘʟᴇ ʟᴏᴠᴇᴅ ᴛᴏ sᴛᴜᴅʏ ᴀɴᴅ ʀᴇᴀᴅ ʙᴏᴏᴋs ... ɴᴏᴡ ᴘᴇᴏᴘʟᴇ ʟᴏᴠᴇ ᴛᴏ ᴜᴘᴅᴀᴛᴇ ғᴀᴄᴇʙᴏᴏᴋ ᴀɴᴅ ʀᴇᴀᴅ ᴛʜᴇɪʀ ᴡʜᴀᴛsᴀᴘᴘ ᴍᴇssᴀɢᴇs.

ɪ ʀᴇᴄᴇɪᴠᴇᴅ ᴛʜɪs ʀᴇᴀʟɪsᴛɪᴄ ᴍᴇssᴀɢᴇ ғʀᴏᴍ ᴏɴᴇ ᴏғ ᴍʏ ғʀɪᴇɴᴅ ᴀɴᴅ ᴏɴ ʀᴇᴀʟɪᴢɪɴɢ ᴛʜᴀᴛ ɪᴛ's ʜᴀʀᴅ ғᴀᴄᴛ ғᴏʀ ᴛᴏᴅᴀʏ's ʟɪғᴇ ɪ ᴀᴍ BLOGGING TO ALL MY FOLLOWERS. 

Aravind T...