Friday, September 28, 2018

1980s TV - A Flash Back

1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை.

1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.

இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சு இருந்தா கோடீஸ்வரன் ன்னு அர்த்தம். அப்போது டிவி கிறது குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தர் மாதிரி. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்தாலே பெரிய விஷயம். அந்த டிவி ஒரு ரெண்டு நாள் சரியா ஓடலைன்னு சொன்னா தெருவே துக்கத்தில் மிதக்கும். 1980 களில் எல்லார் வீட்டுலயும் டிவி க்கு மரத்தினால் ஆனா கூடு செஞ்சு வச்சு இருப்பாங்க அதுக்குள்ள டிவி ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அந்த மரப்பெட்டிக்கு மேல அழகா ஒரு பூச்சாடி இருக்கும். நமக்கு ரொம்ப பழக்கமா இருப்பாங்க ஆனா டிவி போடும்போது கதவை சாத்திக்கிடுவாங்க. யாருனே தெரியாதவங்க "ஏன் தம்பி வெளிய நிக்குற" வீட்டுக்குள்ள வந்து உட்காந்து பாரு" ன்னு அன்பா கூப்பிடுவாங்க.

80 களின் தொடக்கத்தில் பெரும்பாலும் சின்ன சைஸ் டிவி களே வந்தன, டிவி பார்க்கும் போது மேல் இருந்து கீழாக கோடு வந்து கொன்டே இருக்கும். 80 களின் மத்தியில் தான் தான் கோடு வராத டிவி வந்தது. 80 களின் இறுதியில் தான் கலர் டிவி வந்தது. சிலர் டிவியில் படம் பெரியதாக தெரிய வேண்டும் என்பதற்க்காக திரைக்கு முன்பு ஒரு அடி தூரத்திற்கு லென்ஸ் வைத்து இருப்பார்கள். சிலர், கருப்பு-வெள்ளை டிவியில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களால் ஆன பிளாஸ்டிக் கவர்களில் அவர்களுக்கு பிடித்த வண்ண கவர்களை வாங்கி பொருத்தி இருப்பார்கள்.

சில வீடுகளில் உள்ளெ சென்று பார்க்க வேண்டும், உள்ளே என்றால் எள் விழ இடம் இருக்காது. அவ்வளவு கூட்டம் இருக்கும் அந்த வீட்டினுள். சில வீடுகளில் வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் டிவி யை வெளியே வைத்து விடுவார்கள். அந்த தெருவில் உள்ள பெரியவர் டிவி பார்க்க வந்து விட்டால், டிவி வைத்திருக்கும் வீட்டில் உள்ள குடும்பத்த தலைவரே தான் உட்காந்து இருந்த கட்டிலில் இருந்து இறங்கி கீழே உட்காந்து கொண்டு அவருக்கு கட்டிலில் இடம் அளிப்பார்.

சில வீடுகள்ல கூட்டம் சேர்ந்துடுச்சுனா சும்மானாச்சும் ஆஃப் பண்ணிட்டு அப்புறம் கூட்டம் கலைஞ்ச உடனே டிவி மறுபடியும் ஆன் பண்ணுவாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட நம்ம நண்பர்களும் ஆஃப் பண்ணும்போது "எஸ்" ஆகிட்டு, ஆன் பண்ணும் போது கரெக்ட்டா மறுபடியும் வந்துடுவாங்க. அப்படி டிவி ஆப் பண்ணிட்டு கதவை அடைச்சுட்டா எத்தனை தெரு தாண்டினாலும் டிவி இருக்கிற வீட்டை கண்டுபுடிக்க உதவுறதுதான் இந்த ஆண்டெனா. வீட்டு கூரை மேல ஆண்டெனா இருந்தா வீட்டுக்குள்ள டிவி இருக்குனு அர்த்தம்.

வீட்டின் மேல் ஆண்டெனா மாட்டி விட்டாலே நாலு தெரு வரை மக்கள் வந்து விசாரிப்பார்கள், "டிவி வாங்கிட்டிங்களாக்கும், எத்தனை ரூபாய்?, ஹையா ஜாலி, இனிமே உங்க வீட்டுலயே வந்து பாத்துக்கலாம்" என்று நட்புடன் சிலரும், "டிவி மட்டும் வாங்கி இருக்கீங்க, சீக்கிரம் அதுக்கு ஒரு பொட்டி செஞ்சு போடுங்க" என்று டிவி மீதி அக்கறையாக சிலரும் பேசுவார்கள்.

அப்போ நமக்கு இரண்டே சானெல்கள் சென்னை தொலைக்காட்சி யும், டெல்லி (Doordarshan) தொலைக் காட்சியும். இப்போது உள்ளது போல் 500 சானெல்கள் எல்லாம் கிடையாது. காலை 9.00 மணி முதல் மாலை 5.30 வரை டெல்லி தூர்ஷார்ஷன், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சென்னை தொலைக் காட்சி. ரிமோட்டிற்கு எல்லாம் அப்போது வேலையை இல்லை. டிவி ஆன் பண்ண ஆஃப் பண்ண மட்டும்தான் ரிமோட்.

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஒரு மினி திருவிழா என்றால், ஞாயிற்றுக்கிழமை சினிமா ஒரு பெரிய திருவிழா. அதிலும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள்தான் . எப்போவது கலர் படங்கள் வரும். வெள்ளிக்கிழமை 7.00 மணிக்கு வரும் எதிரொலி நிகழ்ச்சியில் அந்த வார படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள். தங்கள் அபிமான நடிகர் படம் என்றால் அறிவிப்பு வரும்போதே கைதட்டல் காதைப் பிளக்கும்.

ஞாயிறு மாலை 5.30 க்கு படம் போடுவார்கள், இப்போது உள்ளது போல் படங்கள் இடையே விளம்பரங்கள் செய்யும் யுக்தி அப்போது இல்லை. விளம்பரம் 5.00 மணிக்கு ஆரம்பித்து, சரியாக முப்பது நிமிடங்கள் ஓடும். படம் ஆரம்பித்து விட்டால் இடையில் விளம்பரம் கிடையாது. ஒளிபரப்பு தொழில் நுட்ப பிரச்சினையில் நின்று விட்டால் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற போர்டு மட்டும் வரும். படத்தின் நடுவே வேறு எந்த தொந்தரவும் இருக்காது.

பக்கத்துக்கு வீட்டு மாமி, எதுத்த வீட்டு அக்கா, அடுத்த வீட்டு பாட்டி என்று எல்லாரும் சரியாக மாலை 5.00 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்து விட்டு விளம்பரம் போடும்போது அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் இருக்கும், ஒரே ஒரு டிவி முன்பு ஆஜர் ஆகிவிடுவார்கள்.

பெண்கள் அனைவரும் ஏதோ கோவிலுக்கு செல்வது போல நன்றாக தலைசீவி, பூ வைத்து, பவுடர் போட்டுக் கொண்டு வருவார்கள் டிவி பார்க்க. சினிமாவே புடிக்காது என்று வீராப்பு காட்டும் மாமா கூட படம் ஆரம்பித்த பிறகு யாருக்கும் தெரியாமல் நைசாக கடைசி வரிசையில் வந்து உட்காந்து விடுவார். வழக்கமாக டிவி பார்க்க வரும் ஒருவர் அன்று வர வில்லை என்றால், ஏன் அவருக்கு உடம்பு சரி இல்லையா? என்று கூட்டம் நலம் விசாரிக்கும். "டேய், ஒரு எட்டு அந்த மாமிகிட்ட போய், படம் போட்டாச்சுன்னு சொல்லு" என்று பக்கத்துக்கு வீடு அக்கா, தன் பையனை மாமி வீட்டிற்கு அனுப்புவார்.

சோக காட்சிகளை கண்டு வெம்பி மனம் வெதும்பும் பெருசுகளைப் பார்த்து இளசுகள் கிண்டல் செய்வது தனி சுவாரசியம். சில நகைச்சுவை காட்சிகளை இளசுகள் பட்டாளம் சிரித்து ரசிக்கும் "இதுல என்ன இருக்குன்னு இப்படி சிரிக்கிறீங்க" என்று பெருசுகள் பட்டாளம் கவுண்டர் கொடுக்கும்.

சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படங்களின் வரிசையில் மாதம் ஒரு முறை தமிழ் படம் வரும். அதில் வீடு, உதிரிப்பூக்கள் என்று அவார்ட் வாங்கின படமாக போடுவார்கள். அன்னைக்கு மட்டும் எல்லாருக்கும் கை, கால் ஓடாது, இன்னைக்கு ரெண்டு படம், ரெண்டு படம் என்று ஊரே ஜே ஜே என்று இருக்கும்.

அதே போன்று பெரிய தலைவர்கள் யாரும் இறந்து விட்டால், டிவி யில் செய்தி தவிர, மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு சோக வயலின் இசை மட்டும் ஒலித்துக் கொன்டே இருக்கும். 1984-ல் இந்திரா காந்தி இறுதி ஊர்வலமும், 1987 ல் எம்.ஜி. ஆர். இறுதி ஊர்வலம் டிவி தந்த மிகப் பெரிய சோக சுவடுகள்.

1983-ல் கபில் தேவ் தலைமையில் ஆனா இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது டிவி தந்த மறக்க முடியாத வெற்றி நிகழ்வு.

அப்போது எல்லாம் டிவி வைத்து இருக்கும் வீட்டுக்காரர்களிடம் யாரும் எந்த சண்டைக்கும் போக மாட்டார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் நட்பு வைத்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டம் இருக்கும், தெருவில். விளையாட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிவி இருக்கும் வீட்டில் நாய் வளர்த்தால் அதற்கு பிஸ்கட் வாங்கிச் சென்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

படத்தின் போது, இடையே வரும் செய்திதான் எல்லாருக்கும் இடைவேளை. செய்தி போட ஆரம்பித்த உடன் பெண்கள் கூட்டம் கலைந்து வீட்டிற்குச் சென்று மிச்சம் மீதி உள்ள வேலைகள், குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை முடித்து கொண்டு வரும். விவரம் தெரிந்த ஆண்கள் மட்டும் உட்காந்து செய்தியை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

செய்தி முடிந்து சிறிது நேரம் விளம்பரம், அப்போது கூட்டம் அவரவர் தான் முன்பு உட்காந்து இருந்த அதே இடத்தில சண்டை போடாமல் வந்து அமர்ந்து கொள்ளும்.

அப்போது செய்தி வாசித்த, ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், பாத்திமா பாபு என்று ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் ஷோபனா ரவியை அடிச்சுக்க இன்று வரை ஆள் இல்லை.

இப்படி படம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஒரு திருவிழாதான். பாடல் என்றால் வெள்ளிக்கிழமை போடும் ஒலியும் ஒளியும் மட்டும் தான். 5 பாடல்களை பார்க்க ஒரு வாரம் முழுவதும் தவம் இருக்க வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை கரெண்ட் போய் விட்டால் அந்த ஆற்றாமையை யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி இருக்கும். அந்த வாரமே கருப்பு வாரமாக மனதில் பதிந்து விடும். இப்போது உள்ளது போன்று ஆயிரத்து எட்டு மியூசிக் சேனல்கள் அன்று கிடையாது. அப்படியே கரண்ட் இருந்து ஒலியும் ஒளியும் பார்த்தாலும் நமது அபிமான நடிகர் பாடல் ஒரு இருவாராம் தொடர்ந்து வரவில்லை என்றால், "தொலைக்காட்சில வேணும்னே அவர் பாட்ட போட மாட்டுக்கிறாங்க" என்று கண்டனக் குரல்கள் மெலிதாக வரும்.

செவ்வாய்க்கிழமை போடும் ஒரு மணி நேர நாடகத்திர்ற்கு அவ்வளவு மதிப்பு. இரவு 7.30 முதல் 8.30 வரை வரும், நாடகத்தின் முடிவு ஒரே நாளில் தெரிந்து விடும். மற்ற நாட்களான திங்கள், புதன்-வெள்ளி யில் அரை மணிநேரம் இரவு 7.30 - 8.00 தொடர்கள் ஒளிபரப்பாகும். கே. பாலச்சந்தரின் "ரயில் சிநேகம்", சோ வின் "ஜனதா நகர் காலனி" நடிகை ராகவி (ராஜ சின்ன ரோஜா வில் நடித்தவர்) நடித்த "சக்தி 90", Y. G. மஹேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்த "சாத்தியமா சொல்றேன்", காத்தாடி ராம மூர்த்தியின் "பஞ்சு-பட்டு-பீதாம்பரம்", ரகுவரன் போதைக்கு அடிமையானவராக நடித்த "இது ஒரு மனிதனின் கதை", சுஜாதாவின், கணினியை மையமாக வைத்து ஒளிபரப்பான அறிவியல் தொடர் "என் இனிய இயந்திரா" (இன்றைய "எந்திரன்" படத்திற்கு அதுதான் முன்னோடி) போன்ற தொடர்களுக்கு தனி மவுசு. இப்போது உள்ள சீரியல்களில் உள்ளது போன்று, ஒரு குடும்பத்தைக் கெடுப்பது, கள்ள உறவுகள், பச்சிளம் குழந்தைக்கு விஷம் வைப்பது, சதி திட்டம் தீட்டுவது போன்ற எந்த காட்சியும் அன்று இருக்காது.

இதையும் தாண்டி மொழி தெரியாவிட்டாலும் நாம் பார்க்கும், புதன் கிழமை - சித்ரஹார், சாந்தி தொடர், சனிக்கிழமை ஹிந்தி படம், ஷாருக்கான் நடித்த "சர்க்கஸ்" தொடர், இந்தியாவின் பாரம்பரியத்தை சொல்லும் அற்புதமான தொடரான "சுரபி" என்று வேறு ரகங்களும் உண்டு.

ஞாயிறு காலை ஒளிபரப்பான மகாபாரதம் மற்றும் தினமும் இரவு ஒளிபரப்பான சஞ்சய் கானின் "திப்பு சுல்தான்" தொடரை பார்க்காதவர்கள், இன்று 35 வயதினைத் தாண்டியவர்களில் எவரும் இல்லை. அவ்வளவு பிரபலம். இப்போது உள்ளது தமிழ் போன்ற டப்பிங் எல்லாம் அப்போது இல்லை, புரியாத இந்தியில் தான் பார்க்க வேண்டும்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை திரைப்படத்திற்கு முன்னோட்டமாக வருவது காலை 8 மணி முதல் 8.30 வரை ஒளி பரப்பாகும் திரை மலர் தான். தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அனைவரிடமும் சென்று அடைந்தது அந்த கால கட்டங்களில்தான். அனைவரும் ஒரே நிகழ்ச்சிகளை பார்ப்பதால், அதன் பின்னரும் அதில் வந்த நாடகங்கள், நடிகர்களின் பேட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்புகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

அன்று ஒரு தெருவே ஒற்றுமையாக இருந்து டிவி பார்த்த காலம் போய், இப்போது நம் குடும்ப உறுப்பினர்களுடன் கூட ஒன்றாக டிவி பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனக்கு புடித்த சானல் தான் வேண்டும் என்று சண்டை வேறு. போதாக்குறைக்கு ரூமிற்க்கு ஒரு டிவி, கைக்கு ஒரு செல் போன் வைத்துக் கொண்டு தனித்தனியாக பிரிந்து விடுகிறோம். 500 சேனல்ககள் இருந்தாலும், எதிலும் மனம் லயிப்பதில்லை. ஒரு நாளைக்கு 1000 பாடல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அன்று வாரம் ஒரு முறை ஒலியும் ஒளியும் தந்த மகிழ்ச்சி ஏனோ இப்போது வருவது இல்லை.

இன்று ஆன்டெனாக்கள் மட்டும் மறையவில்லை, நம் ஒற்றுமையும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சேர்ந்தே மறைந்து விட்டது.

அரவிந்த் த.

Thursday, August 30, 2018

உற்சாகம்

💃 உற்சாகமே ஆரோக்கியம்

உற்சாகமாக இருப்பது ஒரு கலை

அது மிக சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும்

பாருங்களேன்....

பெரும்பாலும் உற்சாகமாக இருப்பவருக்கு அதிக கஷ்டங்கள் வருவதில்லை

வந்தாலும் அவ்வளவு பாதிப்பு இருப்பதில்லை

கடல்போல் வந்தாலும் பனிபோல் மறைந்து விடும்

அவர்களை சுற்றி எப்போதுமே கூட்டம் இருக்கும்

பிரச்சனைகளை அதிகம் கொண்ட நோய்கள்கூட அதிகம் தாக்குவதில்லை இத்தகையவர்களை

எப்பொழுதும் உற்சாகமாக வளைய வருபவர்களுக்கு உறவுகளும்.. சுற்றமும் அதிகரிக்கும் நாளுக்கு நாள்

இதிலிருந்து என்ன தெரிகின்றது

எல்லோரது மனமுமே

அந்த உற்சாகத்திற்கு ஏங்குகிறது

ஆசை கொள்கிறது

அந்த உற்சாகத்தை அனுபவிக்கின்றது

தான் இருக்கும் நிலையைவிட

அந்த உற்சாக நிலை தன்னை எளிதில் ஆட்கொள்கின்றது

இயற்கையாக அமைந்தால் தான் என்றில்லை

தனக்கு பிடித்தது போல் தன்னை மாற்றி கொள்ளலாமே

அதில் என்ன தடை இருக்கின்றது

இந்த மாதிரி விஷயங்களில் தயக்கமும்.. கூச்சமும்

நமது மிக வலுவான எதிரிகள்

அவர்களை கழுத்தை பிடித்து அப்புறப்படுத்தி விட வேண்டும்

ஒருவரை சந்திக்கும் போது

ஹாய் என்ற நமது உற்சாக குரலே

அந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் கலகலப்பாக்கவல்லது

அதே சூழ்நிலையை

அழு மூஞ்சியாக்குவதும் நமது கையிலேயே

நடவடிக்கையிலேயே தான் இருக்கின்றது அனைத்தும்

பலர் கூடியிருந்தாலும் மோசமான மந்த நிலை நிலவினாலும்

ஒரே ஒரு உற்சாகவாதி அங்கே தலைகாட்டினால் போதும்

எல்லா முகங்களும் ஆட்டோமேட்டிக்காக டியூப்லைட் போட்டுக் கொள்ளும்

புன்னகையும்.. உற்சாகமும்.. சிரிப்புகளும்.. கலகல பேச்சுகளும் தீபோல் பற்றிக் கொள்ளும்

இறுக்கம் மாறும்

வெண்கல கடையில் யானை புகுந்தது போல் மிக கலகலப்பாகும்

இரத்த ஓட்டம் சீராகும்

சுகர் லெவலை உடனே பார்த்தால் தெரியும் மாற்றமாகியிருக்கும்

மன உளைச்சலும்... அழுத்தமும் சீரடையும்...

சுவாசம் இழுத்து விடப் படும்

உற்சாகத்தோடு அடுத்த வேலையில் ஈடுபட தோன்றும்

நல்ல உறக்கம் இருக்கும்

மொத்தத்தில் இலவசமாக கிடைக்கும்

காஸ்ட்லியான ஒன்று இந்த உற்சாகம்

பல வகையிலும் பயனளிக்க கூடிய ஒரு சொத்து இந்த உற்சாகம்

இந்த சொத்தை மட்டும் சேர்த்து விட்டோமானால் போதும்

எந்த பிரச்சனையையும் எளிதாக கடந்து விடுவோம்

இலவசம் தான் நமக்கு பிடிக்காதே

அதுவும் நல்ல விஷயங்கள் ஆகவே ஆகாது

வறட்டு கௌரவம் உற்சாகமாக இருக்க விடாது

சிரிக்கவே காசு கேட்டால் என்ன செய்வது.......???

எப்போதும் இல்லாவிட்டாலும்

அவ்வப்போதாவது கொஞ்சம் உற்சாகமாக...... சந்தோஷமாக........
இருக்கலாமே

இதில் என்ன பிரச்சனை என்றால்,

நாமும் சிரிக்க மாட்டோம்

மற்றவன் சிரித்தாலும் பிடிக்காது என்றிருந்தால்

யாராலும் காப்பாற்ற முடியாது

ஆரோக்கியத்திற்கு அவசியமானது உற்சாகம்

வாழ்வதற்கு அவசியமானது ஆரோக்கியம்

உற்சாகம் வந்தால் சிரிப்பு சிதறும்

சிரித்துவிட்டால் உற்சாகம் உற்சவம் ஆகும்

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டதே 💃

💃 உற்சாக உற்சவத்தில் : உள் முக பயணம் 💃

அரவிந்த் த.

Sunday, July 29, 2018

Vaubali

Vaubali

Wednesday, June 20, 2018

Yoga

Yoga

Tuesday, May 29, 2018

Csk

Saturday, April 28, 2018

One and only Raja Raja Chozha


வரலாறு பேசுகிறது
ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது...

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.
பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவுமுறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).

1,30,000 ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும், அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (Hollow Tower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்). விமானத்தின் உச்சியில் 80 ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும், இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.

கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.

7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.

சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

Ref:

Saturday, March 31, 2018

மானங்கெட்டத் தமிழனே

மானங்கெட்டத் தமிழனே.
*******************************
உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
பெரியார் சிலையென்று
எல்லா எளவும் இருக்குது

எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சமாதி ?

எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?

எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?

எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?

எங்கடா போனது அந்த
பாண்டிய மன்னனின்
நினைவு மண்டபம்.?

எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?

எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சமாதி ?

எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?

எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை

எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை

அடுத்தால அம்மா, சின்னம்மா
புஜ்ஜிமா,கட்டுமரம்
இப்படி சொல்லியே
நாசமா போங்க..

உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டி நம் தேசத்திற்கு
வெள்ளையனைத் தேடி
வரவழைத்த நம்
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.

அவர்களின் வரலாறும்
வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
ஒழுங்காக இல்லை

இடையில் வந்த அத்துனை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில்
ஓங்கி ஒலிக்கிறது.

கரிகாலன் கட்டியக் கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தமிழனும் தினமும்
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்

அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
இருந்தாலும் கூட
அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை
உலகம் போற்றிட
செய்திருக்க வேண்டும்.?

ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே
நன்றி கெட்டவனே.

பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின்
கல்லறையை பாரடா..

கஜினி முகமதுவை
பதினேழு முறை
ஓடவிட்டு விரட்டிய
நம் சோழனின்
கல்லறையை பாரடா..

தான் கட்டியக் கோவிலில்
தன் பெயரை எழுதாமல்
அதில் வேலை செய்த
சிற்பக்கலைஞர்களின்
பெயரை எழுதி வைத்த
நம் ராஜ ராஜ சோழனின்
கல்லறையை பாரடா..

தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின்
கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா
மானங்கெட்டத் தமிழனே.

அப்படி என்னாடா இந்த
இடையில் வந்தவன்
உனக்கு செய்துவிட்டான்?

இடையில் வந்த ரெண்டு
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்

கக்கன் யாரென்று
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க
தலைவராய் மாற்றி
வைத்துவிட்டாய்.

மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும்
இன்றும், முதல் மரியாதை
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு
உனக்கு ஏனடா
இல்லாமல் போனது
மானங்கெட்டத்  தமிழனே..

*இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் இருந்த்து.*

Tuesday, February 20, 2018

Unknown Indian Penal Codes


1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Ref: Facebook Post.

Aravind T.