இந்து மதம் எங்கிருந்து வந்தது ? இந்து மதம் எப்படி தோன்றியது ? இந்து மதம் என்றால் உண்மையில் என்ன ?. இந்து மதத்திற்கு எதனால் இந்து என்கிற பெயர் வந்தது? இந்து என்பது உண்மையில் மதம் தானா ? இப்படி பல கேள்விகளுக்கான விடையை இங்கு பார்ப்போம். அதோடு கீழே உள்ள விடீயோவிலும் அதற்கான விடைகள் பல உள்ளன.
இமாலயத்திற்கு இந்துசாகரத்திற்கும் இடையில் வாழ்ந்த மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக சிறந்த கலாச்சாரத்தோடும் பண்பாட்டோடும் வளர்ந்து வந்தனர். அந்த கலாச்சாரமானது எந்த ஒரு சக்தியாலும் சிதைக்க முடியாத வகையில் கட்டமைக்க பட்டு சிறப்பான ஒரு கலாச்சாரமாக வளர்ந்தது. இந்த கலாச்சாரம் சிதைக்கப்படாமல் சிறப்புற்று வளர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இமாலய மலையும் இந்து சாகரமும் தான். இதன் காரணமாக வெளி ஆட்கள் யாரும் அவ்வளவு எளிதில் இங்கு நுழைய முடியவில்லை.
ஆரம்பத்தில் போருக்கு இங்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை ஆனால் ஆன்மீகத்திற்கும், ஆடல் பாடல் போன்ற கலைகளுக்கு அதிக அளவில் முக்கிய துவம் கொடுக்க பட்டது இந்த கலாச்சாரத்தில் தான். அதோடு விஞ்ஞான ரீதியாகவும், வானியல் மற்றும் புவியில் சாஸ்திரத்திலும் இங்கு வாழ்ந்த மக்கள் பெரிதும் முன்னேறி இருந்தனர். இப்படி மக்கள் எந்த ஒரு இன்னலும் இன்றி சரியான பாதையில் முன்னேறி செல்லவும், பல துறைகளில் வளர்ச்சி காணவும் முக்கிய காரணமாக இருப்பது இமாலயமும் இந்து சாகரமும் தான். இதுவே நமக்கு அரணாக இருந்து நம்மை காத்து வருகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள துவங்கினர். ஆகையால் இமாலயத்தையும் இந்து சாகரத்தையும் போற்றும் வகையில் அவை இரண்டையும் ஒன்றிணைத்து அந்த பகுதியில் வாழும் மக்கள் தங்களை இந்து என்று அடையாளப்படுத்திகொள்ள துவங்கினர்.
- Advertisement -
இமாலயத்திற்கும் இந்து சாகரத்திற்கும் இடையில் இருக்கும் மனிதர்கள் மட்டுமே இந்து கிடையாது. இங்கு உள்ள புல் பூண்டு முதல் மரம் செடி கொடி என அனைத்து தாவரங்களும், இந்த பகுதியில் வாழும் அனைத்து உயிரினங்களும் இந்து தான். ஆகையால் இந்து என்பது ஒரு மதம் கிடையாது. இந்து என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிரினங்களின் அடையாளம். அப்படி தான் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்நியர்களின் வருகை நமது நாட்டை நோக்கி அதிகரிக்க துவங்கியது. அப்போது தான் இந்து என்பது ஒரு மதமாக உருவெடுக்க துவங்கியது. மதம் இல்லாத நமது நாட்டில் இந்து என்கிறது ஒரு மத சாயம் பூசப்பட்டது. அது மட்டும் இல்லாமல் வெளியில் இருந்து வந்த அந்நியர்கள் தங்களை வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்தினர். இதனால் இந்த குறிப்பிட்ட பகுதியில் அது வரை வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என பிரிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் அவர்கள் இந்து என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு அடையாளம் என்பதை புரிந்துகொள்ள தவறினர்.
ஆரம்ப கட்டத்தில் நமது கலாச்சாரமானது கடவுளை நோக்கிய கலாச்சாரமாக இல்லை. மாறாக முக்தியை நோக்கிய கலாச்சாரமாக இருந்தது. அனைவருக்கும் உதவுவது, அனைவரோடும் இணைத்து இருப்பது என மனிதனின் முக்திக்கு தேவையான அனைத்து விடயங்களும் நமது கலாச்சாரத்தில் இருந்து வந்தது. ஆனால் அந்நியர்களின் வருகைக்கு பிறகு நமது கலாச்சாரம் சிறுது சிறிதாக சிதைய துவங்கியது. முக்தியை நோக்கி இருந்த நமது கலாச்சாரம் தேவைக்காக நோக்கி நகர ஆரமித்தது. அடுத்தவர்களுக்கு கெடுதலை விளைவித்து அதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்க்கும் பக்தியாகவும், சுயநல தேவைகளை பூர்த்தி செய்யும் பக்தியாகவும் நமது கலாச்சாரம் மாற்றப்பட்டது. அதோடு நமக்கான அடையாளம் நமது மதமாக மாறிப்போனது. இந்தியாவில் இன்று பல மதங்கள் இருந்தாலும் அனைவரும் இந்து தான். இந்து என்பது மதம் அல்ல நமது அடையாளம் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
Ref:
அரவிந்த் த.